ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் இன்று காலை 6.31 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதே போல் நிக்கடா மாகாணத்தில் உள்ள நோடோ, நனாவ் மற்றும் அனாமிசு நகரங்களிலும் நில நடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. அதோடு வஜிமா மற்றும் சுசு நகரங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ரயில்வே துறை புல்லட் ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மின்சாரம் இன்றி ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. எனினும் சிறிது நேரத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.