சிலி நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலி நாட்டின் சான்டியாகோவில் இருந்து சுமார் 524 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய சிலியில் உள்ள அடகாமா பகுதியில் இன்று அதிகாலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவுகோலில் 6.1 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் லா செரீனாவில் இருந்து வட-வடமேற்கில் 123 கிமீ தொலைவில் இருந்தது. மேலும் 30 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.