கனடாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் போர்ட் மெக்னீல் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயத்தில் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவும் இல்லை.