இந்தோனேசியாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்தோனேசியாவின் கடலோர நகரமான துவாலுக்கு தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவில் 6.9 அலகுகளாக பதிவானது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 5.1 என்ற ரிட்டர் அளவில் இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டன. இவ்வாறு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. எனினும் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வுகள் அருகில் உள்ள தீவுகளில் நன்கு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயமும் இல்லை என்று இந்தோனேசிய வானியல் மையம் தெரிவித்துள்ளது.