ஜப்பானில் நேற்று பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டது. ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள இஷிகாவா தீவில் இருபதுக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த பகுதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அங்கு கடல் அலைகள் 16 அடி உயரம் வரை எழும்ப வாய்ப்புள்ளது. இந்த நிலநடுக்கங்களுக்கு பிறகும் சுமார் 155 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது
இஷிகாவா தீவில் வீடுகள் சேதம் அடைந்து ஈடுபாடுகளில் பலர் சிக்கினர். 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மீட்பு பணியில் ஜப்பான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. மேற்கு கடற்கரை ஒட்டிய நகரங்களின் பல பகுதிகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் கைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க அவசரகால மையத்தை ஜப்பான அரசு அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில் மக்கள் எப்படிப்பட்ட பேரிடர்க்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.