உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா மேளாவில் 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடந்து வருகிறது. இதன் 4-வது புனித நீராடல் திருவிழா, வசந்த பஞ்சமியையொட்டி நேற்று நடந்தது. கல்விக் கடவுளான சரஸ்வதி, இந்த நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. நேற்று காலை 4 மணி முதல் மாலை 4 மணிவரை பிரயாக்ராஜில் கங்கையிலும், 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும் 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிப்ரவரி 18-ந் தேதி மகா சிவராத்திரி புனித நீராடலுடன் மகா மேளா நிறைவடைகிறது.