மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி கட்டாயம் அரசாணை நிறுத்தி வைப்பு

April 23, 2025

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழியாக்கப்படுவது தொடர்பான உத்தரவை மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. மகாராஷ்டிரா மாநில அரசு, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை இந்தி மொழி 3-வது கட்டாய மொழியாக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் […]

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழியாக்கப்படுவது தொடர்பான உத்தரவை மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

மகாராஷ்டிரா மாநில அரசு, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை இந்தி மொழி 3-வது கட்டாய மொழியாக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாய பாடமாக கற்பிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. புதிய திட்டத்தின்படி, இனிமேல் ஐந்தாம் வகுப்புவரை இந்தியும் கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டிய மொழியாக்கப்படும்.

இந்த புதிய நடைமுறை 2025-26 கல்வியாண்டில் முதற்கட்டமாக 1-ம் வகுப்பில் அமல்படுத்தப்படும். பிறகு 2, 3, 4 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு 2026-27-ல், 5, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 2027-28-ல், 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2028-29-ல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கையை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் “இந்தி திணிப்பு” எனக் கண்டித்தன. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழியாக்கப்படுவது தொடர்பான உத்தரவை மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu