மகாராஷ்டிராவில் 3வது மொழியாக இந்தி கற்பிக்கும் திட்டம் திரும்ப பெறப்பட்டது

மும்மொழிக் கொள்கையின் கீழ் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கும் திட்டம் எதிர்ப்பு காரணமாக மகாராஷ்டிரா அரசு நிராகரித்துள்ளது. கல்விக்கான முடிவுகள் வல்லுநர் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது குறித்து திட்டமிட்டிருந்தது. மத்திய மும்மொழிக் கொள்கையின் கீழ் இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் […]

மும்மொழிக் கொள்கையின் கீழ் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கும் திட்டம் எதிர்ப்பு காரணமாக மகாராஷ்டிரா அரசு நிராகரித்துள்ளது. கல்விக்கான முடிவுகள் வல்லுநர் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கற்பிப்பது குறித்து திட்டமிட்டிருந்தது. மத்திய மும்மொழிக் கொள்கையின் கீழ் இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தன. ஜூலை 5ம் தேதி மும்பையில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு முடிவை திரும்பப் பெற்றது. முதலமைச்சர் பட்னாவிஸ், "கல்வியாளர்களால் அமைக்கப்படும் வல்லுநர் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார். இது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமையால் கிடைத்த வெற்றி என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu