இன்றைய வர்த்தக நாளில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகன நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 7.3% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன. மும்பை பங்குச் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு பங்கு 2711.75 அளவுக்கு சரிந்தது. இது கடந்த 28 மாதங்களில் ஏற்படும் மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சி விகிதமாகும். இதற்கு முன், கடந்த பிப்ரவரி 14, 2022ல் ஒரே நாளில் கிட்டத்தட்ட 8.6% அளவுக்கு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் சரிந்தன.
இன்றைய வர்த்தக நாளில், 7.3% அளவுக்கு மஹிந்திரா நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. இதற்கு முன், கடந்த ஜூன் 4ம் தேதி, தேர்தல் முடிவுகள் வெளியானதன் எதிரொலியாக, 7.1% அளவுக்கு பங்குகள் வீழ்ச்சி அடைந்திருந்தன. எனினும், இவை இரண்டும் ஒற்றை நாளில் ஏற்படும் வீழ்ச்சி மட்டுமே. பொதுவாக, மஹிந்திரா பங்கு மதிப்பு ஏற்றம் பெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களில் 92% மற்றும் கடந்த ஓராண்டில் 70% அளவுக்கு பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.