வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதன் ஒட்டுமொத்த விற்பனை 93.07 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனமானது ஆகஸ்ட் 2021 இல் 30,585 யூனிட்களை விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டில் 59,049 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதாவது பயன்பாட்டு வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 87% அதிகரித்து ஆகஸ்ட் 2022 இல் 29,516 ஆக உயர்ந்தது. அதேபோல் பயணிகள் வாகனங்கள் விற்பனையில் 29,852 உயர்ந்துள்ளது. அதே சமயம் வணிக வாகனங்கள் பிரிவில், 21,492 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது குறித்து ௯றிய வாகனப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா , Scorpio-N, Scorpio Classic மற்றும் புதிய Bolero MaXX ஆகியவற்றின் வெளியீடுகளால் விற்பனை அதிகரித்துள்ளதாக ௯றினார். அத்துடன் பண்ணை உபகரணத் துறை (FES) ஆகஸ்ட் 2021 இல் 19,997 யூனிட்களை விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்டில் 20,138 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது பற்றி பேசிய , FES மற்றும் எம்&எம்-ன் தலைவர் ஹேமந்த் சிக்கா, விவசாயிகள் அறுவடைப் பணிக்குத் தயாராகி வரும் நிலையில் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தையில், கடந்த ஆண்டை விட 1% அதிகமாக 1,382 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளதாகக் ௯றினார்.