தென் ஆப்பிரிக்கா நாட்டில், கடந்த 2022 ல் வேகமாக வளர்ச்சியடைந்த நிறுவனமாக இந்தியாவின் மஹிந்திரா அடையாளம் காணப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் மஹிந்திரா எஸ் ஏ நிறுவனம் விற்பனையில் 78% வளர்ச்சியை கடந்த வருடம் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, பயணிகள் வாகனச் சந்தையில் 80% வளர்ச்சியடைந்து, 4027 வாகனங்களை கடந்த வருடம் விற்பனை செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் இலகு ரக சரக்கு வாகன விற்பனை 77% உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் மொத்தமாக 8885 இலகு ரக சரக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1000 வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை, மஹிந்திரா நிறுவனம் இரண்டாவது முறையாக வேகமாக வளர்ச்சி அடைந்த நிறுவனமாக வளர்ந்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர், வருடாந்திர வளர்ச்சி விகிதம் 23.6% ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் எக்ஸ் யூ வி 300 மிகவும் பாதுகாப்பான வாகனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.














