மஹிந்திரா நிறுவனம், பெல் ஹவுசிங்கில் ஏற்பட்ட பிறழ்வை சரி செய்வதற்காக, XUV700 மற்றும் ஸ்கார்பியோ N வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
எக்ஸ்யூவி 700 மாடலில் 12566 வாகனங்களும், ஸ்கார்பியோ என் மாடலில் 6618 வாகனங்களும் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில், பெல் ஹவுசிங் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. வெண்டர் தரப்பில், தரக் கட்டுப்பாட்டில் பிழை நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெறப்படுகின்றன. மஹிந்திரா நிறுவனம், டீலர்கள் வழியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, பிறழ்வாக உள்ள பாகத்தை இலவசமாக சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.














