மஹிந்திரா வாகன நிறுவனத்தை பொறுத்தவரை, பொலேரோ வாகனம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், ஒரு லட்சம் எண்ணிக்கையை தாண்டி பொலேரோ வாகன விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2000 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பொலேரோ ரக வாகனம், இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவு தலைவர் விஜே நாகரா, “பொலேரோ என்பது வெறும் எஸ்யூவி ரக வாகனம் அல்ல; அது இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளில் ஒரு உறுப்பினராக மாறியுள்ளது. அது தவிர, இந்தியாவின் பல்வேறு அரசாங்க அலுவலகங்களில், அவசர கால நடவடிக்கைகள், தீயணைப்பு போன்ற பணிகளுக்கு பொலேரோ வாங்கப்பட்டுள்ளது. மேலும், பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, இந்த வாகனம் உதவியாக பணியாற்றி வருகிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.