ஈராக்கில் அமெரிக்க மற்றும் இராக்கிய படையினர்கள் இணைந்து நடத்திய தாக்குதலில், ஐஎஸ் (இஸ்லாமிய தேச) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர்.
அன்பார் பாலைவனப் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வான்வழித் தாக்குதலை நடத்திய பிறகு தரையிறங்கிய அமெரிக்க படையினர்கள் பயங்கரவாதிகளுடன் மோதினர். இந்த தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை; ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்பட பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் தற்கொலை வெடிகுண்டு ஆடைகளை அழித்தனர். இதில் 7 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர், அதில் 2 பேருக்கு ஹெலிகாப்டலிருந்து தரையிறங்கும்போது காயம் ஏற்பட்டது.














