மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு - உலக அளவில் பாதிப்பு

July 20, 2024

மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக உலக அளவில் இன்று 2-வது நாளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனம் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டது. இதன் காரணமாக விண்டோஸ் மென்பொருளின் சில இயங்குதளங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் உள்ள கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி சேவைகள் முடங்கியது. நேற்று மதியம் முதல் உலகம் முழுவதும் மருத்துவம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, […]

மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக உலக அளவில் இன்று 2-வது நாளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனம் சென்சார் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டது. இதன் காரணமாக விண்டோஸ் மென்பொருளின் சில இயங்குதளங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இந்த சர்வர் முடக்கத்தால் உலகம் முழுவதும் உள்ள கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி சேவைகள் முடங்கியது. நேற்று மதியம் முதல் உலகம் முழுவதும் மருத்துவம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, வங்கி பணிகள் போன்றவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அனைத்து சேவைகளும் முடங்கியது. பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கி போயின. இந்தியாவில் மட்டும் நேற்று சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் வங்கி சேவை, பங்கு சந்தை சேவை போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தினர் இன்று பால்கன் சென்சார் மென்பொருளை சரி செய்து விட்டனர். இதன் காரணமாக இயல்புநிலை திரும்பி உள்ளது. இன்று மாலை முதல் இயல்புநிலை முழுமையாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu