தமிழ் இனத்தில் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கோடிக்கணக்கான சித்தர்கள் இம்மண்ணில் அவதரித்திருந்தாலும் அதில் 18 சித்தர்களே முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்களில் பல அஷ்டமா சித்திகளை பெற்ற சித்தராக முக்கியமானவராக இருந்தவர் மகா சித்தர் மச்சமுனி.
யுகங்களை கடந்து தங்கள் தேகத்தை கல்பதேகமாக உருமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள். திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக உருவமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷி பிரதானமானவர். மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பல பெயர்கள் கொண்ட சித்தர் இவர் ஒருவர் தான்.
மச்சமுனி சித்தர் பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் தான். மொத்தம் 300 வருடம் 62 நாட்கள் மண்ணில் பூத உடலோடு வாழ்ந்ததாக குறிப்புகள் சொல்கின்றன. மச்சமுனி, அகத்தியர் காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.இவர் காக புசுண்டர் சித்தரின் சீடர். மச்சமுனி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர். அவரின் பிறப்பே மிகவும் சிறப்பானது.
நீர்நிலை ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவிதமாக உரையாடியபடி இருந்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்னை உமா தேவிக்குக் அயர்ச்சி உண்டாகி உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன் இருந்தது. அந்த மீன், பாக்கியம் பெற்ற மீன். அது தான் கருவிலேயே திருகொண்ட மீன்.
உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேசங்களை முழுமையாக கேட்க வாயப்பு பெற்ற அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் உருவம் மாறி இறைவன் உமாதேவன் முன்னால் தன் கால்களை உதைத்துக் கொண்டே அழுது கொண்டிருந்தது.
உடனேயே அந்த தாய்மீனும் மானுட உருவம் பெற்று ஓடியே வந்து தன் பிள்ளையை கட்டி அணைத்துக் கொண்டு, அப்படியே இறைவன் இறைவி காலில் விழுந்து வணங்கினாள். மச்சமாய் இருந்து, இறைவன் மொழி கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் இவருக்கு கிடைத்தது கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண அருள் மழையும் பாலகன் மச்சேந்திரனுக்குக் கிடைத்தது!
இது மச்சமுனியின் அவதார வரலாறு. பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே கிடைத்தாகவும். அவர் வெகு நெடுங்காலம் யோக வழியில் தவமிருந்து வந்ததால். அட்டமா சித்துக்கள் அனைத்துமே அவருக்கு கைவரப் பெற்றது. ஒருமுறை ஓரு ஊரில், மச்சமுனி உணவு வேண்டி ஒரு வீட்டின் முன் நின்றார். இவருக்கு பிச்சையிட்ட அந்த வீட்டுப் பெண் இவரை வலம் வந்து வணங்கினாள்.
அந்தப் பெண்னின் வருத்தத்தை உணர்ந்த மச்சமுனி, அதற்கு காரணம் என்னவென்று கேட்டு அந்த பெண்ணுக்கு வெகு காலமாக புத்திரப்பேறு வாய்க்கவில்லை என்று தெரிந்து கொண்டார். அந்த பெண் விருப்பப்படி அவளுக்கு புத்திரப் பேறு அருள விபூதி பிரசாதம் கொஞ்சம் கொடுத்து அந்த பெண்ணை உட்கொள்ள சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த பெண் அந்த விபூதியைப் பெற்றுக் கொண்டு அவளது அண்டை வீட்டு பெண்ணிடம் நடந்தவற்றை பற்றி கூற அவளோ மச்சமுனியை பற்றி தெரியாமலேயே தவறாக சொன்னாள்.
அதை நம்பி பயந்து போன அந்த பெண் மச்சமுனி கொடுத்த விபூதியை நெருப்பில் போட்டுவிட்டாள் அந்த பெண். பின் கொஞ்சம் அடுப்புச் சாம்பலை அள்ளி வீட்டின் புழக்கடையில் கொட்டிவிட்டு இந்த விஷயத்தையே முற்றிலும் மறந்தே போய்விட்டாள். சில வருடங்கள் கழித்து. மச்சமுனி மீண்டும் அந்த ஊர்பக்கம் வந்த மச்சமுனி தான் விபூதி கொடுத்த பெண் வீட்டின் வாசலில் நின்று பெண் அந்த பெண்ணை அழைத்து உன் பிள்ளையை நான் காண வேண்டும், அழைத்து வரவும் என்று கூறினார்.
அந்தப் பெண்ணூம் விபூதி பெற்ற பின் நடந்த உண்மை அனைத்தையும் மறைக்காமல் மச்சமுனி சித்தரிடம் கூறினாள். அதை கேட்டு சிரித்து கொண்ட சித்தர் அடுப்புச் சாம்பல் எங்கே என்று கேட்டு தெரிந்து அது கொட்டப்பட்ட இடத்துக்கு போய் கோரக்கா வா என்று சத்தமாக குரல் கொடுத்தார். அந்த நொடி அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சாம்பல் கொட்டப்பட்ட காலத்திலிருந்து அப்போது வரை உள்ள ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி இருக்குமோ அந்த வயதில் ஒரு சிறுவன் அந்தச் சிறுவன் வெளியே வந்தான். அந்தப் பெண்ணிடம் அவனை அனுப்பினார் சித்தர்.
ஆனால் அந்த சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் பின்பற்றி வாழ விரும்புவதாகக் கூற அவனை தன் சீடனாகவே ஏற்றுக் கொண்ட மச்சமுனி. அவனோடு பயணத்தைத் தொடர்ந்தார். பின் பன் நெடுங்காலம் பாரத கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் புரிந்து வட இந்தியாவில் பல அற்புதங்களை புரிந்தார்.
மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள், மச்சமுனி சூத்திரம் என ஏராளமான நூல்களை ஓலைச்சுவடிகளில் இயற்றியாகவும் இவர் வரலாறு சொல்கிறது. இறுதியில் ஜீவ சமாதி அடைந்ததாகவும் அது குறித்து இருவேறு தகவல்கள் உள்ளது ஒன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாகவும் , இன்னொரு தகவல் அவர் திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப்படுகின்றது. திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம் உள்ளது.
எது எப்படி இருந்தாலும் இன்னும் இவரை மனதார வேண்டி தம் வேண்டுதல்கள் நிறைவேற தொடர்ந்து 12 முதல் 18 வார வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்கள் இவ்வுலக வாழ்வில் எந்த துறையில் பணிபுரிந்தாலும், அந்த துறையில் செல்வம், புகழ், தலைமை, அதிகாரம் பெற இல்லத்திலும் உள்ளத்திலும் எங்கும் எப்போதும் நிறைவாக வாழ உறுதுணை புரிந்து ஆசி வழங்கி கொண்டு தான் இருக்கிறார் மகத்துவம் நிறைந்த மகா சித்தர் மச்சமுனி.