மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஓபன் பேட்மிட்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் ஷிராக் ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிட்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராம் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஜோடி ஆனது பிரான்சின் லூகாஸ் கோர்வி, ரோனன் லாபர் ஜோடியை எதிர்கொண்டு 21- 11, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அடுத்து நடைபெற உள்ள கால் இறுதி சுற்றில் சீனாவின் ஹீ ஜி டிங், ரென் ஜியாங் ஜோடியுடன் மோத உள்ளது.














