மலேசியாவின் புதிய மன்னராக ஜோஹார் பகுதியைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்றுள்ளார்.
மலேசியாவின் புதிய மன்னருக்கான பதவி ஏற்பு விழா கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் தேசத்தின் புதிய மன்னராக சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மலேசியாவின் மன்னராக இருந்த அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது. அதன் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்றுள்ளார். இவர் அந்நாட்டின் 17 வது மன்னராக சொல்லப்பட்டுள்ளார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் சுல்தான் இப்ராஹிம் மன்னராக பொறுப்பேற்றார். இவரது பதவி காலத்தில் மலேசியாவில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என பெரிதும் நம்பப்படுகிறது.