மலேசிய உச்சநீதிமன்றம் ஷரியா சட்டங்களை ரத்து செய்தது

February 10, 2024

மலேசிய உச்சநீதிமன்றம் ஷரியா மத அடிப்படையிலான சட்டங்களை ரத்து செய்தது. இஸ்லாமிய சட்டமான ஷரியாவை அடிப்படையாகக் கொண்டு மலேசியாவின் கிளாம்தான் மாகாண அரசு 16 சட்டங்களை இயற்றியிருந்தது. அதனை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாதவை என்று நேற்று அறிவித்தது. மலேசியாவில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் பெரிதான் கட்சி கிளாம்தான் மாகாணத்தில் ஆட்சி செய்து வருகிறது. அந்த மாகாண அரசு பாலினம் மாறி உடை அணிதல், பாலியல் குற்றங்கள், போலி சாட்சியம் அளித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு ஷரியா […]

மலேசிய உச்சநீதிமன்றம் ஷரியா மத அடிப்படையிலான சட்டங்களை ரத்து செய்தது.

இஸ்லாமிய சட்டமான ஷரியாவை அடிப்படையாகக் கொண்டு மலேசியாவின் கிளாம்தான் மாகாண அரசு 16 சட்டங்களை இயற்றியிருந்தது. அதனை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாதவை என்று நேற்று அறிவித்தது.
மலேசியாவில் எதிர்க்கட்சியாக இருந்து வரும் பெரிதான் கட்சி கிளாம்தான் மாகாணத்தில் ஆட்சி செய்து வருகிறது. அந்த மாகாண அரசு பாலினம் மாறி உடை அணிதல், பாலியல் குற்றங்கள், போலி சாட்சியம் அளித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு ஷரியா அடிப்படையில் தண்டனை வழங்கும் புதிய சட்டங்களை இயற்றியது. எனினும் ஏற்கனவே மத்திய அரசு மத அடிப்படையில் பல சட்டங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், மாகாண சட்டங்கள் தேவை இல்லாமல் புது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த சட்டங்களை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu