மாலத்தீவில் அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக 2 மந்திரிகள் கைது

June 29, 2024

மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுக்கு பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலத்தீவு சுற்றுலாத்துறை மாதிரி பாத்திமா ஷாம்னாஸ் சலீம். இவருடைய கணவர் ரமீஸ் அதிபர் மாளிகையில் மந்திரி பதவிக்கு இணையான பதவியில் உள்ளார். இந்நிலையில் மொய்சுக்கு பாத்திமா பில்லி சூனியம் வைத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதனையடுத்து போலீசார் அவர் வீட்டை சோதனையிட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்குரிய வகையில் பல பொருட்கள் சீக்கின. அவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பாத்திமா மற்றும் ரமீஸ் […]

மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுக்கு பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலத்தீவு சுற்றுலாத்துறை மாதிரி பாத்திமா ஷாம்னாஸ் சலீம். இவருடைய கணவர் ரமீஸ் அதிபர் மாளிகையில் மந்திரி பதவிக்கு இணையான பதவியில் உள்ளார். இந்நிலையில் மொய்சுக்கு பாத்திமா பில்லி சூனியம் வைத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதனையடுத்து போலீசார் அவர் வீட்டை சோதனையிட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்குரிய வகையில் பல பொருட்கள் சீக்கின. அவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பாத்திமா மற்றும் ரமீஸ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு இடையே பாத்திமா மற்றும் ரமீஸ் ஆகியோரை அதிபர் மாளிகை பதவி நீக்கம் செய்தது. மாலத்தீவு சட்டத்தின்படி பில்லி சூனியம் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu