மாலத்தீவு - சீனா இடையே 21 ஒப்பந்தங்கள்

January 11, 2024

மாலத்தீவு - சீனா இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் அங்கு சீன அதிபர் ஜீ ஜிங்ப்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாலத்தீவு அரசுக்கும் சீன அரசுக்கும் […]

மாலத்தீவு - சீனா இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் அங்கு சீன அதிபர் ஜீ ஜிங்ப்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மாலத்தீவு அரசுக்கும் சீன அரசுக்கும் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது இரு நாட்டு அதிபர்கள் முன்னிலையில் நடைபெற்றது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது மாலத்தீவுக்கு சீன சுற்றுலா பயணிகள் அதிகம் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முகமது மூயிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். அவர் பதவியேற்ற உடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu