மாலத்தீவு அதிபரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சி திட்டம்

January 30, 2024

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று மாலத்தீவு அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் நியமன பரிந்துரைக்கு ஒப்புதல் பெறுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆளும் மாலத்தீவு முற்போக்கு கட்சி- தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவை முடங்கியது. இந்த சம்பவங்கள் பெரிய அளவில் […]

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று மாலத்தீவு அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் நியமன பரிந்துரைக்கு ஒப்புதல் பெறுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆளும் மாலத்தீவு முற்போக்கு கட்சி- தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவை முடங்கியது. இந்த சம்பவங்கள் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டன. எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற அவை தலைவர் முகமது அஸ்லாம் மற்றும் அவை துணைத்தலைவர் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக 23 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளும் கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சமர்ப்பித்தது.

இந்நிலையில் அதிபர் முகமது மூயிஸுக்கு எதிராக ஜனநாயகவாதிகள் கட்சியுடன் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முடிவு நேற்று நடைபெற்ற கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மாலத்தீவு நாடாளுமன்றம் 87 உறுப்பினர்களைக் கொண்டது அதிபர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எளிதாக்கும் வகையில் விதிகள் திருத்தி அமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 56 வாக்குகள் கொண்டு அதிபரை பதவியில் இருந்து நீக்கலாம். அந்த வகையில் அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு 56 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறும் சூழலில் அதிபர் முகமது மூயிஸ் பதவி இழப்பார் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu