இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும் - மாலத்தீவு

November 21, 2023

இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றார். இவர் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்ற உள்ளதாக வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் மத்திய மந்திரி ரிஜூவிடம் ராணுவத்தை திரும்ப பெற கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் துணை செயலாளர் முஹம்மது பீர்சூல் நிருபர்களிடம் பேசினார். […]

இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றார். இவர் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்ற உள்ளதாக வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் மத்திய மந்திரி ரிஜூவிடம் ராணுவத்தை திரும்ப பெற கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் துணை செயலாளர் முஹம்மது பீர்சூல் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் மாலத்தீவில் மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களை திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் தொடங்கிவிட்டார். முந்தைய அரசு இந்தியாவுடன் துறைமுகம், பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது என்றார். புதிய அதிபர் முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu