இந்திய விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் தடை - சிறுவன் பலி

January 22, 2024

மாலத்தீவில் சிறுவனின் சிகிச்சைக்கு உரிய நேரத்தில் விமானம் அளிக்கப்படாததால் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மாலத்தீவில் மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல இந்தியா வழங்கிய டோரினியர் விமானத்திற்கு அனுமதி அளிக்கப்படாததால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். முன்னதாக அந்த சிறுவனுக்கு மூளை கட்டி காரணமாக பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை மாலிக்கு கொண்டு செல்ல அவரது பெற்றோர் விமான அவசர ஊர்தி கேட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அதிகாரிகள் 14 மணி நேரம் […]

மாலத்தீவில் சிறுவனின் சிகிச்சைக்கு உரிய நேரத்தில் விமானம் அளிக்கப்படாததால் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மாலத்தீவில் மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்ல இந்தியா வழங்கிய டோரினியர் விமானத்திற்கு அனுமதி அளிக்கப்படாததால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். முன்னதாக அந்த சிறுவனுக்கு மூளை கட்டி காரணமாக பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை மாலிக்கு கொண்டு செல்ல அவரது பெற்றோர் விமான அவசர ஊர்தி கேட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அதிகாரிகள் 14 மணி நேரம் தாமதம் ஏற்படுத்தினர். அவர்கள் தகுந்த நேரத்தில் உதவி செய்யாததால் அந்த சிறுவன் உயிர் இழந்தார்.

மருத்துவ அவசர உதவிகளுக்கு விமான சேவை வழங்கும் ஆசந்தான் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தது. மாலத்தீவு, இந்தியா இடையே சமீப காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களிடையே இந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மாலத்தீவு எம்பி மிகாலி நசீம் மாலத்தீவு அதிபரின் விரோதம் காரணமாக மக்கள் ஏன் சாக வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu