மாமாஎர்த் நிறுவனம், உடல் பராமரிப்பு மற்றும் தேக நலன் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹோனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம், இன்று பொதுப் பங்கீட்டுக்கு வருவதாக பதிவு செய்துள்ளது. பொதுப் பங்கீட்டுக்கு வருவதன் மூலம், சுமார் 4 பில்லியன் ரூபாய் மதிப்பில் 46.8 மில்லியன் பங்குகளை புதிதாக வினியோகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாமாஎர்த் நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் முறையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வர்த்தகம் செய்து வருகிறது. இது ஹிந்துஸ்தான் யூனிலீவரின் முன்னாள் அதிகாரி வருண் அலக் மற்றும் அவரது மனைவி கசல் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், 2025 ஆம் ஆண்டில், 27.5 பில்லியன் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்திற்கான வாடிக்கையாளர் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பொது பங்கீட்டு வருகை அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.