உடல் பராமரிப்பு பொருட்களை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான மாமாஎர்த் கடந்த வாரம் பொது பங்கிட்டுக்கு வெளியானது. இதன் தாய் நிறுவனமான ஹோனாசா கன்சியூமர், நேற்று முதல் முறையாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அறிமுக நாளிலேயே இதன் பங்கு மதிப்பு 4.2% உயர்ந்து வர்த்தகமானது.
நேற்று முதல் முறையாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹோனாசா கன்ஸ்யூமர், 108.62 பில்லியன் ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பங்குகள் 330 ரூபாய்க்கு வெளியானது. இது உடனடியாக 337.6 ரூபாய்க்கு உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ விலை 324 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மாமாஎர்த், இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான வருண் அலக் மற்றும் அவரது மனைவி கஜல் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.