மத்திய அரசு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் நிலுவையில் உள்ளது என மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பாக்கி 7000 கோடி ரூபாய் உள்ளது எனவும் இதற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.