டென்மார்க்கில், 4 ஆண்டுகளுக்கு முன்னர், பூனை கடித்த நபருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டென்மார்க்கை சேர்ந்த 33 வயதான ஹென்ரிக் என்ற நபரை, அவரது செல்ல பூனை, 4 ஆண்டுகளுக்கு முன்னர் கடித்தது. பூனை, கைவிரலை கடித்ததை அவர் பெரிது படுத்தவில்லை. ஆனால், சில மணி நேரங்களில், அவரது விரல் வழக்கத்திற்கு மாறாக வீக்கம் அடைந்தது. மருத்துவரை ஆலோசித்த போது, அவர் சதை உண்ணும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதன் பின்னர், அவர் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. வாதம், நீரிழிவு பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட அவருக்கு, இதுவரை 15 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், விரலை அகற்ற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார். எனவே, பூனைக்கடியை சாதாரணமாக எண்ண வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் சோகத்துடன் கூறி வருகின்றனர்.














