திரிபுரா முதல்வராக மாணிக் சஹா இன்று பதவியேற்கிறார்.
திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளில் 55 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட ஐ.பி.எப்.டி., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த இடதுசாரிகள், இம்முறை 47 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக மாணிக் சஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக இன்று பதவியேற்கிறார். இதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர்.














