மணிப்பூர் - சிறுபான்மை சமூகத்தினரை சந்தித்த அமித்ஷா

மியான்மர் நாட்டு எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில், கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், நாகா மற்றும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில், 80 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மாநிலத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர், மைதேயி, குகி சமூகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், […]

மியான்மர் நாட்டு எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில், கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், நாகா மற்றும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில், 80 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மாநிலத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு அவர், மைதேயி, குகி சமூகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், வன்முறைக்கு தீர்வு காண உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தனது மணிப்பூர் பயணம் குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு உறுதுணை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களை, விரைந்து வீடுகளுக்கு அனுப்புவதில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளார். மேலும், மணிப்பூர் மோரேவில் வசிக்கும் தமிழ் வணிகர்களை அவர் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், “மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட, மக்களிடம் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu