மெட்டா இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி மனிஷ் சோப்ரா ராஜினாமா

May 17, 2023

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் மனிஷ் சோப்ரா. இவர் கடந்த 2019 ஜனவரி மாதத்தில், மெட்டா நிறுவனத்தில் இணைந்தார். மெட்டா இந்தியா நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். தற்போது, தனது ராஜினாமா செய்தியை அறிவித்துள்ளார். தனது லிங்க்டுஇன் பக்கத்தில், இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். மெட்டா நிறுவனத்தில் பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாகவும், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா தளங்களை இந்தியாவின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு […]

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் மனிஷ் சோப்ரா. இவர் கடந்த 2019 ஜனவரி மாதத்தில், மெட்டா நிறுவனத்தில் இணைந்தார். மெட்டா இந்தியா நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். தற்போது, தனது ராஜினாமா செய்தியை அறிவித்துள்ளார். தனது லிங்க்டுஇன் பக்கத்தில், இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். மெட்டா நிறுவனத்தில் பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாகவும், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா தளங்களை இந்தியாவின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், கூறியுள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வரிசையாக வெளியேறி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை, 4 உயரதிகாரிகள் வெளியேறி உள்ளனர். மனிஷ் சோப்ராவுக்கு முன்னதாக, ராஜீவ் அகர்வால், அபிஜித் போஸ், அஜித் மோகன் உள்ளிட்டோர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu