ஜூன் மாதத்தில், இந்திய உற்பத்தி துறையில் சரிவு

July 4, 2023

கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் உற்பத்தி துறையில் சரிவு பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில், உற்பத்தி துறையில் நல்ல முன்னேற்றம் பதிவாகி வந்த நிலையில், ஜூன் மாதத்தில் சரிவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி துறை நடவடிக்கைகளுக்கான பி எம் ஐ குறியீட்டு எண், மார்ச் மாதத்தில் 56.4 ஆக இருந்தது. அது ஏப்ரல் மாதத்தில் 57.2 ஆகவும், மே மாதத்தில் 58.7 ஆகவும் உயர்ந்தது. அதன்படி, மே மாத உற்பத்தி […]

கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் உற்பத்தி துறையில் சரிவு பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில், உற்பத்தி துறையில் நல்ல முன்னேற்றம் பதிவாகி வந்த நிலையில், ஜூன் மாதத்தில் சரிவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி துறை நடவடிக்கைகளுக்கான பி எம் ஐ குறியீட்டு எண், மார்ச் மாதத்தில் 56.4 ஆக இருந்தது. அது ஏப்ரல் மாதத்தில் 57.2 ஆகவும், மே மாதத்தில் 58.7 ஆகவும் உயர்ந்தது. அதன்படி, மே மாத உற்பத்தி குறியீட்டு எண் 31 மாதங்களில் இல்லாத உச்சபட்ச பதிவு என சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில், பி எம் ஐ குறியீட்டு எண் 57.8 ஆக சரிவடைந்துள்ளது. எனினும், உற்பத்தி துறை ஆரோக்கியமான பாதையில் இயங்கி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து 24 மாதங்களாக, பிஎம்ஐ குறியீட்டு எண் 50 என்ற விளிம்பைத் தாண்டி பதிவாகி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி நிறுவனங்களுக்கு தொடர்ந்து சாதகமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu