இஸ்ரேல் போரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் மாயமாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே கடந்த பத்து நாட்களாக போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகி உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 155 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தப் போர் இஸ்ரேல் மற்றும் ஹமாசுக்கு இடையேயானது அல்ல. இது உலகளாவிய போர் என்றும் தெரிவித்துள்ளது. இதில் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மாயமானார்கள் மற்றும் உயிரிழந்தார்கள் என்ற தகவலையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா மற்றும் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.














