மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு மசோதா இன்று மகாராஷ்டிரா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு உறுதியளித்தது. அதன் பெயரில் மனோஜ் ஜராங்கே பாட்டீல் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பெயரில், இன்று மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு துறைகளில் மராத்தா சமூகத்தினருக்கு பிரத்தியேகமாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.














