புதுக்கோட்டையில் கடல் பயணத் தடை அறிவிப்பு

November 25, 2024

புதுக்கோட்டை மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக் கூடாது என மீன் வளத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை மூலம் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீன் வளத்துறை கடலுக்கு செல்லக் கூடாது என்று […]

புதுக்கோட்டை மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக் கூடாது என மீன் வளத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை மூலம் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பருவ மழை காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீன் வளத்துறை கடலுக்கு செல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் உள்பட நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு பயனர்களால் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு இந்த அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu