அமெரிக்காவில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விசாரணையில் மார்க் ஸுக்கர்பேர்க் மன்னிப்பு கோரினார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா ஆகியவை உலகின் முன்னணி சமூக வலைதளங்கள் ஆகும். இவற்றின் நிறுவனர் மார்க் ஜூகார்பர்க் ஆவார். சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து அந்நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பப்பட்டது. அந்த அடிப்படையில் அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது. இதில் மார்க் நேரில் பங்கேற்று தனது வாதங்களை முன் வைத்தார். இந்த குழந்தைகள் தாக்குதல் சம்பவங்களில் பல உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதனைக் குறித்து அவரிடம் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஸ், மார்க்கை நோக்கி உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா என கேட்டார். அப்பொழுது மார்க் ஜூகார்பர்க் எழுந்து நின்று பாதிக்கப்பட்டவர்களை நோக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நீங்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். இதுபோன்ற துயரங்கள் வேறு எவருக்கும் வரக்கூடாது என்று கூறினார். சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பு ஏற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நீண்ட நாட்களாகவே முயன்று வருகிறது.