சுமார் 500 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய மெட்டா நிறுவனத்தின் பங்குகளை மார்க் ஜூக்கர்பர்க் விற்பனை செய்துள்ளார்.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், மார்க் ஜூக்கர்பர்க் அதிக எண்ணிக்கையிலான மெட்டா பங்குகளை விற்பனை செய்துள்ளார். கிட்டத்தட்ட 1.28 மில்லியன் பங்குகள் விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவற்றின் மதிப்பு 428 மில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. சராசரியாக, ஒரு நாளில் விற்கப்பட்ட பங்குகளின் மதிப்பு 10.4 மில்லியன் டாலர்கள் அளவில் உள்ளது. கடந்த டிசம்பர் 28 அன்று, அதிகபட்சமாக, 17.1 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான மெட்டா பங்குகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 2021 க்குப் பிறகு, மெட்டா பங்குகளை விற்பனை செய்யாத மார்க் ஜூக்கர்பர்க், கடந்த இரு மாதங்களில் மட்டும் அதிக பங்குகளை விற்பனை செய்துள்ளது கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், அவரிடம் 13% மெட்டா பங்குகள் உள்ளன. அவரின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் டாலர்கள் ஆகும்.