மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் கருவியான மெட்டா ஏஐ தளத்தில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பர்க், புதிய அம்சம் பற்றிய விவரங்களை காணொலியாக வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்களை, நிகழ் நேரத்தில் கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யும் அம்சம் மெட்டா ஏஐ தளத்தில் வெளியாகி உள்ளது. இதை எளிமையாக விளக்குவதற்கு தனது புகைப்படத்தை வைத்தே மார்க் சக்கர்பர்க் காணொலி வெளியிட்டுள்ளார். அதில், தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதை பிரபல திரைப்பட கதாபாத்திரம் போல மாற்றி அமைக்குமாறு கட்டளை பிறப்பிக்கிறார். அதற்கேற்றவாறு மெட்டா ஏஐ அவரது புகைப்படத்தை மாற்றம் செய்து தருகிறது. இந்த புதிய அம்சம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், சிலி, அர்ஜென்டினா, ஈக்வடார், கொலம்பியா, பெரு, மெக்ஸிகோ மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளில் இந்த அம்சம் வெளியாகியுள்ளது. விரைவில் மற்ற உலக நாடுகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.