மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா நிதிக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டது. இந்த நன்கொடை, ஜுக்கர்பெர்க் மற்றும் டிரம்ப் இடையே மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பை தொடர்ந்து வழங்கப்பட்டது. சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளிப்படையாக வெளியாகாத போதிலும், மெட்டா அதனை அமெரிக்க கண்டுபிடிப்புகளுக்கான முக்கியமான தருணம் என்று வர்ணித்துள்ளது. கேபிடல் தாக்குதலுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டில் டிரம்பின் சமூக ஊடக […]

மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா நிதிக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டது. இந்த நன்கொடை, ஜுக்கர்பெர்க் மற்றும் டிரம்ப் இடையே மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பை தொடர்ந்து வழங்கப்பட்டது. சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளிப்படையாக வெளியாகாத போதிலும், மெட்டா அதனை அமெரிக்க கண்டுபிடிப்புகளுக்கான முக்கியமான தருணம் என்று வர்ணித்துள்ளது. கேபிடல் தாக்குதலுக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டில் டிரம்பின் சமூக ஊடக கணக்குகளை மெட்டா தடை செய்ததை அடுத்து, இந்த நன்கொடை சர்ச்சைக்குரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் கணக்குகள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் செயல்படுத்தப்பட்டது நினைவு கூறத்தக்கது.

ஜுக்கர்பெர்க் மற்றும் டிரம்ப் இடையேயான உறவுகள் மாறுபாடானதாக உள்ளது. டிரம்ப், 2020 தேர்தல் மத்தியில் ஜுக்கர்பெர்க் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் சமீபத்தில் டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு ஜுக்கர்பெர்க் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன், ஜூலை மாதத்தில் டிரம்ப் கொலை முயற்சியில் இருந்து தப்பியதை "அமெரிக்க தேசியக்கொடியுடன் கை சுற்றி நிற்கும் அவரது துணிச்சலான தருணம்" என்று பாராட்டி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu