இந்தியாவின் தலைசிறந்த 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1.3 லட்சம் கோடி உயர்வு

April 29, 2024

இந்தியாவின் தலைசிறந்த 10 நிறுவனங்களில் இடம்பெற்ற முக்கிய 6 நிறுவனங்களின் கூட்டு சந்தை மதிப்பு 1.3 லட்சம் கோடி அளவில் உயர்ந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏர்டெல், ஐடிசி, எல்ஐசி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய ஆறு நிறுவனங்கள் இந்தியாவின் தலைசிறந்த 10 நிறுவனங்களுள் இடம்பெற்றுள்ளவை. கடந்த வார சந்தை நிலவரங்களில், இந்த நிறுவனங்கள் அதிக உயர்வை பதிவு செய்துள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு 130734.57 கோடி அளவில் […]

இந்தியாவின் தலைசிறந்த 10 நிறுவனங்களில் இடம்பெற்ற முக்கிய 6 நிறுவனங்களின் கூட்டு சந்தை மதிப்பு 1.3 லட்சம் கோடி அளவில் உயர்ந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏர்டெல், ஐடிசி, எல்ஐசி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய ஆறு நிறுவனங்கள் இந்தியாவின் தலைசிறந்த 10 நிறுவனங்களுள் இடம்பெற்றுள்ளவை. கடந்த வார சந்தை நிலவரங்களில், இந்த நிறுவனங்கள் அதிக உயர்வை பதிவு செய்துள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு 130734.57 கோடி அளவில் உயர்ந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி 45158.54 கோடி, ஐசிஐசிஐ வங்கி 28726.33 கோடி, ஏர்டெல் 20747.99 கோடி, ஐடிசி 18914.35 கோடி, எல் ஐ சி 9487.5 கோடி மற்றும் இன்போசிஸ் 7699.86 கோடி அளவில் சந்தை மதிப்பு உயர்வை பதிவு செய்துள்ளன. அதே சமயத்தில், தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ், எச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu