எல்ஐசி நிறுவனம், அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியதால், எல்ஐசி நிறுவனத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டது. மேலும், முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து பெரும் நெருக்கடி உருவானது. ஆனால், தற்போது, அதானி குடும்ப பங்குகள் உயர்ந்துள்ள நிலையில், அதில் முதலீடு செய்த எல்ஐசியின் தொகையும் உயர்ந்துள்ளது. இந்த மே மாதத்தில் மட்டுமே, அதானி குழுமத்தின் பங்குகள் 37% உயர்வை பதிவு செய்துள்ளன. அதன் விளைவாக, கடந்த வருட ஏப்ரலில் 6200 கோடியாக இருந்த எல்ஐசி முதலீட்டுத் தொகை, தற்போது 45481 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி முதலீடுகள் சரிந்ததால், எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு பங்குகளும் சரிவடைய தொடங்கின. இதனால், முதலீட்டாளர்கள் கவலையில் இருந்தனர். ஆனால், தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி, முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.