சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தை - சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்வு

June 27, 2023

கடந்த இரு வர்த்தக தினங்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று மீண்டு எழுந்துள்ளது. இன்று ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 446 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 63416.03 புள்ளிகள் ஆகவும், நிப்டி குறியீட்டு எண் 18817.40 புள்ளிகள் ஆகவும் பதிவாகி உள்ளன. இன்றைய தினம், எச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இது பங்குச்சந்தையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி […]

கடந்த இரு வர்த்தக தினங்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை, இன்று மீண்டு எழுந்துள்ளது. இன்று ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 446 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 63416.03 புள்ளிகள் ஆகவும், நிப்டி குறியீட்டு எண் 18817.40 புள்ளிகள் ஆகவும் பதிவாகி உள்ளன.

இன்றைய தினம், எச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இது பங்குச்சந்தையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி குழும பங்குகள் வெகுவாக உயர்ந்துள்ளன. அதே போல, அமரராஜா பேட்டரி நிறுவனம் சர்வதேச சூரிய மின் சக்தி திட்டத்தில் ஒப்பந்தமாகியுள்ள செய்தி வெளியானதால், இந்த நிறுவனத்தின் பங்குகளும் ஏற்றமடைந்துள்ளன. இவை தவிர, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டாக் வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ் இண்ட் வங்கி, மாருதி உள்ளிட்ட வெகு சில நிறுவனங்களே இன்று இறக்கத்தை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu