நேற்று, இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவான நிலையில், இன்று பெரிய மாற்றங்கள் இன்றி வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 68.36 புள்ளிகளும், நிஃப்டி 20.25 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன. அத்துடன், சந்தை நிலவரங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை என கூறப்படுகிறது. இறுதியாக, சென்செக்ஸ் 66459.31 புள்ளிகளிலும், நிஃப்டி 19733.55 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, கோல் இந்தியா லிமிடெட், என் டி பி சி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், எஸ்பிஐ, மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட், இண்டஸ் இண்ட் வங்கி, அப்பல்லோ ஹாஸ்பிடல் ஆகியவை சரிவடைந்துள்ளன.