இந்திய பங்குச் சந்தையில் இன்று கரடியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இன்று ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகளை இழந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், சென்செக்ஸ் 702.88 புள்ளிகள் சரிந்து, 65756.43 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 207 புள்ளிகள் இழந்து 19526.55 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டேவிஸ் லேப்ஸ், நெஸ்ட்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்தை சந்தித்துள்ளன. ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ், எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன.