செவ்வாய் கிரகத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரேட்டர்களுக்கு இந்திய விஞ்ஞானி மற்றும் இந்திய நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானி தேவேந்திர லால், காஸ்மிக் ரே பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக பெரிதும் போற்றப்படுபவர். அந்த வகையில், அவரை கௌரவிக்கும் விதமாக, செவ்வாய் கிரகத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரேட்டருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த க்ரேட்டரை கண்டுபிடித்த குழுவில் இந்தியாவின் பிசிகல் ரிசர்ச் லெபாரிட்டரியை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்ததால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. லால் கிரேட்டர் 65 கிலோமீட்டர் அகலமானது. மேலும், 10 கிலோமீட்டர் அகலம் கொண்ட மற்ற இரண்டு கிரேட்டர்களுக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள முர்ஸான் மற்றும் ஹில்சா ஆகிய நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.