செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நாசாவின் ஒடிசி விண்கலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஒரு லட்சமாவது சுற்றுவட்ட பாதையை நிறைவு செய்துள்ளது. மிக முக்கிய மைல் கல்லான இதை பற்றி, சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய எரிமலையின் புகைப்படத்தை பகிர்ந்து நாசா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய எரிமலையான Olympus Mons புகைப்படத்தை ஒடிசி விண்கலம் படம் பிடித்தது. சுமார் 600 கிலோ மீட்டர் பரப்பளவில், செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகைக்கு அருகே இந்த எரிமலை அமைந்துள்ளது. இது செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் தூசி படர்ந்த பனியை 48 கிலோ மீட்டர் உயரத்துக்கு வெளியேற்றுகிறது. பானரோமா முறையில் இந்த எரிமலையின் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசி விண்கலத்தின் சாதனையை இந்த புகைப்படம் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2001 அக்டோபரில் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் நீண்ட நாட்களாக செயல்பாட்டில் உள்ள நாசாவின் திட்டம் இது என்பது கவனிக்கத்தக்கது.