செவ்வாய் கிரகத்திலிருந்த ஏரி ஒன்றை நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பண்டைய காலங்களில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், நாசாவின் பர்சீவரென்ஸ் ரோவர்,வற்றிய நிலையில் உள்ள ஏரி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. Jezero Crater பகுதியில் மிகப்பெரிய ஏரி மற்றும் நதிநீர் டெல்டா இருந்தது, பர்சீவரென்ஸ் ரோவர் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்துள்ள ரோவர், அதன் பூமிக்கு திரும்பும் பயணத்தில் அதனை வெற்றிகரமாக கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா கருவிகள் மூலம் கிரேட்டர் பகுதியில் காணப்படும் மணல் படிமங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இதன் மூலம் உறுதியாகும் என பெரிதும் நம்பப்படுகிறது.