செவ்வாய் கிரகத்தில், அலைகளால் செதுக்கப்பட்ட பாறைகள் கண்டுபிடிப்பு - நாசா

February 9, 2023

செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், அலைகளால் செதுக்கப்பட்ட பாறைகளை கண்டுபிடித்துள்ளது. "இந்தப் பாறைகள், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான மிகப்பெரிய ஆதாரம்" என்று நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஏரியாக இருந்ததாக கருதப்படும் பகுதியில், இந்தப் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தண்ணீரில் ஏற்படும் அலைகளால் செதுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தில் உள்ள கேள் கிரேட்டர் பகுதியில் இந்தப் பாறை கண்டுபிடிக்கப்பட்டது விஞ்ஞானிகள் மத்தியில் […]

செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், அலைகளால் செதுக்கப்பட்ட பாறைகளை கண்டுபிடித்துள்ளது. "இந்தப் பாறைகள், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான மிகப்பெரிய ஆதாரம்" என்று நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஏரியாக இருந்ததாக கருதப்படும் பகுதியில், இந்தப் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தண்ணீரில் ஏற்படும் அலைகளால் செதுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தில் உள்ள கேள் கிரேட்டர் பகுதியில் இந்தப் பாறை கண்டுபிடிக்கப்பட்டது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. செவ்வாய் கிரகம் வறட்சி அடைய தொடங்கியபோது இந்தப் பகுதி உருவானதாக கருதப்படுவதால், இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது என்று நாசா கூறியுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து, நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் தொடர்ந்து பல புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu