மாருதி சுஸுகியின் இன்விக்ட்டோ வாகனம் இந்தியச் சந்தையில் அறிமுகம்

July 5, 2023

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தனது அனைத்து பயன்பாட்டு வாகனமான இன்விக்ட்டோ வாகனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்தியச் சந்தையில் இந்த வாகனத்தின் விலை 24.79 லட்சத்தில் இருந்து 28.42 லட்சம் வரை விற்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தின் வருகை மூலம், மாருதி சுசுகி, ப்ரீமியம் அல்லது உயர் ரக வாகன விற்பனையில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்விக்ட்டோ மாடல் கார்களில், 3 வேரியன்ட்கள் அறிமுகமாக உள்ளன. Zeta + ரகத்தில், […]

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தனது அனைத்து பயன்பாட்டு வாகனமான இன்விக்ட்டோ வாகனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்தியச் சந்தையில் இந்த வாகனத்தின் விலை 24.79 லட்சத்தில் இருந்து 28.42 லட்சம் வரை விற்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தின் வருகை மூலம், மாருதி சுசுகி, ப்ரீமியம் அல்லது உயர் ரக வாகன விற்பனையில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்விக்ட்டோ மாடல் கார்களில், 3 வேரியன்ட்கள் அறிமுகமாக உள்ளன. Zeta + ரகத்தில், 7 இருக்கைகள் கொண்ட வாகனம் 24.79 லட்சத்திற்கும், 8 இருக்கைகள் கொண்ட வாகனம் 24.84 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில், ஆல்பா பிளஸ் ரகம் 28.42 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் மற்ற வாகனங்களை விட இன்விக்ட்டோ வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, 6 ஏர் பேக்குகள், மலைகளில் பாதுகாப்பாக ஏறும் வசதி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிசாஷி தக்கூசி இந்த வாகனத்திற்கு இதுவரை 6200 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது மற்ற நிறுவனங்களின் எஸ்யூவி வாகனங்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu