2022 கார் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை எட்டிய மாருதி சுசுகி

January 4, 2023

மாருதி சுசுகி நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2.63 லட்சம் வாகனங்களை மாருதி சுசுகி ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், 2.05 லட்சம் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, வருடாந்திர ஏற்றுமதி 28% உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக 15 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வாகனங்களை விற்று, வருடாந்திர வாகன விற்பனையில் 16% உயர்வை பதிவு செய்துள்ளது. […]

மாருதி சுசுகி நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2.63 லட்சம் வாகனங்களை மாருதி சுசுகி ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், 2.05 லட்சம் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, வருடாந்திர ஏற்றுமதி 28% உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 2022 ஆம் ஆண்டில், மொத்தமாக 15 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வாகனங்களை விற்று, வருடாந்திர வாகன விற்பனையில் 16% உயர்வை பதிவு செய்துள்ளது.

மாருதி சுசுகி 16 கார் மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக, எஸ் பிரஸ்ஸோ, பலேனோ மாடல் கார்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாருதி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக அதிகாரி ஹிசாஷி தக்கூச்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu